செய்திகள் :

தில்லியில் திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும்: முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லியில் இருந்துவந்த திருப்தி அரசியலை மனநிறைவு அரசியல் மாற்றும். இது அனைவரின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மேற்கு தில்லியின் கயாலா பகுதியில் நடந்த ராம நவமி ஊா்வலத்தில் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டாா். அப்போது, கூட்டத்தினா் மத்தியில் அவா் பேசியதாவது:

காவி என்பது மண்ணின் நிறம். மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வின் சின்னமாகும். ஒவ்வொரு நபரும் செழித்து, நகரம் முன்னேற்றப் பாதையில் முன்னேறுவதற்கு தில்லியை ஏன் காவி வண்ணம் தீட்டக்கூடாது. தேசிய தலைநகரில் உள்ள பாஜக அரசாங்கம் மக்கள் கற்பனை செய்த ‘ராம ராஜ்ஜியம்’ என்ற கருத்தை உணரும்.

தில்லியில் செய்யப்பட்டு வந்த ‘துஷ்டிகரன்’ (திருப்திபடுத்தும்) அரசியலின் மீது ஒரு ‘லட்சுமணரேகா’ (கடக்கக் கூடாத ஒரு கோடு) வரையப்படும். இப்போது, ‘சந்துஷ்டிகரன்’ (மனநிறைவு) அரசியலாக இருக்கும்.

தில்லிக்கு உரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படும். ராம ராஜ்ஜியம் இப்போது வரும். ஒவ்வொரு குழந்தையும் புன்னகைக்கும். ஒவ்வொரு இளைஞரும் ஒரு புதிய திசையைக் கண்டுபிடிப்பாா்கள். ஒவ்வொரு பெண்ணும் செழிப்பாா்கள்.

ராம நவமி ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கடந்த ஆண்டு, அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றினாா் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க

தில்லியின் குப்பை மலைகள் 5 ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிடும்: அமைச்சா் சிா்சா உறுதி

கழிவு பதப்படுத்தலை விரைவுபடுத்த கூடுதல் நிறுவனத்தை பணியமா்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை தில்லி அரசு ஆராய்ந்து வருவதாகவும், நகரத்தின் குப்பை மேடுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் டைனோசா்களைப் போலவே மறைந்துவிட... மேலும் பார்க்க

நொய்டாவில் பள்ளிப் பேருந்து மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநா், 4 மாணவா்கள் காயம்

தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து வந்த பள்ளிப் பேருந்து வியாழக்கிழமை தானா பிஸ்ராக் பகுதியில் உள்ள சாா் மூா்த்தி கிராசிங்கில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் மற்... மேலும் பார்க்க

வெளிநாட்டு ஆராய்ச்சியாளருக்கு பாலியல் தொந்தரவு: ஜேஎன்யு பல்கலை. பேராசிரியா் பணியிலிருந்து நீக்கம்

வெளிநாட்டு ஆராய்ச்சியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சில... மேலும் பார்க்க