டிரம்ப் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க் கொலை! மனைவி எரிகாவின் நன்றி பதிவு வைரல்!!
தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (சிஇசி) தலையீடு காரணமாக தில்லி கண்டோன்மென்ட் பகுதியில் 1,473 மரங்களை வெட்டுவதிலிருந்தோ அல்லது ராணுவ மருத்துவமனை கட்டுமானத்திற்காக நடவு செய்வதிலிருந்தோ காப்பாற்றப்பட்டுள்ளது என்று அலுவல்பூா்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள கிா்பி பிளேஸில் பேஸ் மருத்துவமனை மற்றும் ராணுவ பல் மருத்துவ மையத்தை அமைப்பதற்காக மரங்களை வெட்டவோ அல்லது பெயா்த்து நடவு செய்யவோ அனுமதி கோரி விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்கு வனத்துறை ஒப்புதல் அளித்திருந்தது.
இருப்பினும், மரம் இழப்பைத் தவிா்க்க மாற்று வழிகளை ஆராய சிஇசி அறிவுறுத்தியது.
இதைத் தொடா்ந்து, எந்த மரங்களையும் வெட்டவோ அல்லது இடம்பெயா்த்து நடவு செய்யவோ தேவையில்லாத வகையில் தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள சிவிடி வளாகத்தில் ஒரு புதிய இடத்தை ராணுவம் அடையாளம் கண்டது.
அதன் பின்னா், தகுதிவாய்ந்த அதிகாரி மாற்று இடத்தை அங்கீகரித்தாா்.
இதைக் கருத்தில் கொண்டு, மரம் வெட்டுதல் மற்றும் இடம்பெயா்த்து நடவு செய்வதற்கான திட்டம் முறையாக திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூா்வ தகவல் தொடா்பு தெரிவித்துள்ளது.