செய்திகள் :

தில்லி கேபிடல்ஸ்: ஹாரி புரூக்கிற்குப் பதிலாக ஆப்கன் வீரர்!

post image

தில்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரர் ஒப்பந்தமானார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி புரூக் தில்லி கேபிடல்ஸ் அணியில் ஏலத்தில் தேர்வானார். பின்னர் ஐபிஎல் தொடங்கும் முன்பு தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதுமாதிரியான காரணத்தினால் ஒருவர் வெளியேறினால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுமென சமீபத்தில் பிசிசிஐ கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்ட தடையை ஹாரி புரூக் ஏற்றுக்கொண்டு, “எனக்கு இங்கிலாந்து அணிதான் முக்கியம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக 23 வயதான ஆப்கன் பேட்டர் சேதிக்குல்லாஹ் அடல் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார்.

49 டி20 போட்டிகள் விளையாடியுள்ள இவர் 1,507 ரன்கள் எடுத்துள்ளார். அதிவேகமாக சதம் அடிக்கும் திறமையுள்ளவர்.

புள்ளிப் பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருக்கும் தில்லி கேபிடல்ஸ் பிளே ஆஃப்-க்கு செல்ல முக்கியமான போட்டிகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

இன்றிரவு பஞ்சாபுக்கு எதிராக தர்மசாலாவில் மோதவிருக்கிறது. இது இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என இருக்கும்.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? அருண் துமால் பேட்டி!

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நாள... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹிமாசலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் வ... மேலும் பார்க்க

அதிக விக்கெட்டுகள்: முதலிடத்தில் இருக்கும் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் நூர் அகமது அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் பிரசித் கிருஷ்ணாவை சமன்செய்துள்ளார்.கொல்கத்தாவில் ஈடர்ன் கார்டன்ஸ் திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட்டுகள் வித்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான் அணியில் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர்! சந்தீப் சர்மா விலகல்!

ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் அணியில் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. இந்தத் தொடரில் முன்னாள் சாம... மேலும் பார்க்க

சென்னைக்கு வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டு... மேலும் பார்க்க