செய்திகள் :

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

post image

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவை யாவும் வதந்தி என்றும் கூறினர்.

இந்த நிலையில், யஷ்வந்த் சர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உப்த்யாய் அறிக்கை சமர்ப்பித்ததாகவும் கூறுகின்றனர்.

உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்கலாம்.

இதையும் படிக்க:வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இந்த நிலையில், தில்லியிலுள்ள அவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தின்போது, அந்த வீட்டிலுள்ள ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

தீ விபத்து நேரிட்டபோது சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக் கட்டுகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. அவர் வீட்டில், மொத்தம் ரூ. 37 கோடி அளவில் பணம் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தில்லியிலிருந்து நீதிபதி வர்மா அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, யஷ்வந்த் சர்மா வீட்டில் பணம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தில்லி தீயணைப்புத் துறை விளக்கமளித்தது.

வீட்டில் நேர்ந்த வெடிவிபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

ஹரியாணா மாநிலம் பஹதூர்காரில் உள்ள வீட்டில் நேர்ந்த வெடி விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் மாநில... மேலும் பார்க்க

போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து யுஜிசி... மேலும் பார்க்க

கைப்பற்றிய பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: தில்லி நீதிபதி வா்மா விளக்கம்

‘தீயணைப்புத் துறையினரால் எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது; என் மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு அபத்தமானது’ என்று தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா அளித... மேலும் பார்க்க

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை

திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேஸிலின் ரியோ டி ஜென... மேலும் பார்க்க

பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் போ் பயணம்: 11% உயா்வு

கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் போ் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீத உயா்வு என விமான போக்குவரத்து இயக்குநரகத்தின... மேலும் பார்க்க