பெல் நிறுவனத்தில் துணை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தில்லி பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!
தில்லி பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரம் குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
இந்த நிலையில் தில்லி பேரவைத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.