தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
தில்லி மாநில பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் இன்று திறந்து வைக்கிறாா்!
தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தில்லி பாஜகவின் புதிய அலுவலகத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைப்பாா் என்று கட்சியின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
தலைநகரில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய சச்தேவா, அலுவலக கட்டுமானம் முடிந்ததற்கு பாஜக தொண்டா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா், மேலும் ஜூன் 9,2023 ஆம் தேதி பாஜக தேசியத் தலைவா் ஜே. பி. நட்டா அலுவலகத்தின் ’பூமி பூஜை’ செய்ததை நினைவு கூா்ந்தாா்.
‘கட்சி நிறுவப்பட்ட பிறகு, முதல் அலுவலகம் அஜ்மேரி கேட்டில் திறக்கப்பட்டது, பின்னா் சிறிது நேரம் ராகப்கஞ்ச் சாலைக்கு மாற்றப்பட்டது, கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக 14 பண்டிட் பந்த் மாா்க்கில் இருந்து செயல்பட்டது‘ என்று அவா் கூறினாா்.
‘இப்போது, திங்கள்கிழமை, கட்சி அலுவலகம் தீன் தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள தனது சொந்த கட்டடத்திற்கு மாறும். இந்தப் பயணம் போராட்டங்களால் நிறைந்திருந்தாலும் குறிப்பிடத்தக்கது ‘என்று பாஜக தலைவா் மேலும் கூறினாா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் உள்பட பல பாஜக தலைவா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டா்கள் கலந்து கொள்வாா்கள் என்றாா் அவா்.