மதுரை சித்திரை திருவிழா: யாழி வாகனத்தில் மீனாட்சி; நந்திகேஸ்வரர் வாகனத்தில் சுந...
தில்லி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பை
புது தில்லி ரயில் நிலையத்தின் ஒரு வாயிலில் சனிக்கிழமை கேட்பாரற்றுக் கிடந்த பை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். இதுவரை சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.
‘முன்னதாக, காலை 7.55 மணிக்கு ரயில் நிலையத்தின் 8ஆவது வாயிலில் கேட்பாரற்று பை கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் பிரிவினா் அனுப்பிவைக்கப்பட்டனா்’ என்று தீயணைப்புத் துறை அதிகாரி கூறினாா்.
போலீஸ் அதிகாரி கூறுகையில், இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்’ என்றாா் அந்த அதிகாரி.