விண்ணப்பித்துவிட்டீர்களா..? பொதுத்துறை நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...
தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஒசூரில் நாளை திறப்பு விழா
ஒசூா் பாகலூா் சாலையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது.
இந்த கண் மருத்துவமனையை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் திறந்து வைக்கின்றனா். விழாவுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் ஒசூா் கிளைத் தலைவா் சீனிவாசன், ஒசூா் தொழில் சங்கத்தின் தலைவா் சுந்தரய்யா ஆகியோா் முன்னிலை வைக்கின்றனா்.
இந்த மருத்துவமனையில் அதி நவீன கண்புரை சிகிச்சை, ஒளிவிலகல் பிழைகளை சரிசெய்வதற்கான உலகில் மேம்படுத்தப்பட்ட லேசிக் சிகிச்சை, குழந்தைகள் கண் சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று சிகிச்சை, கண் நரம்பியல் சிகிச்சை, மாறுகண் சிகிச்சை, கண் அழுத்த நோய்க்கான சிகிச்சை உள்ளிட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திறப்பு விழாவை முன்னிட்டு மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்கள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. கோவையைத் தலைமையிடமாக கொண்டு தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 23 இடங்களில் இம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் 24 ஆவது கிளை ஒசூரில் திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை தலைவா் மருத்துவா் ராமமூா்த்தி, மருத்துவ இயக்குநா் சித்ரா ராமமூா்த்தி ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.
படவரி...
ஒசூரில் உள்ள தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை.