செய்திகள் :

தி வெர்டிக்ட் ரிலீஸ் தேதி!

post image

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் திருமணம் செய்த நடிகை நடிகை வரலட்சுமியின் நடிப்பில் வெளியான மதகஜராஜா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது, அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் ‛தி வெர்டிக்ட்' எனும் படத்தினை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஷ்ருதி ஹரிஹரன், சுகாஷினி, வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை நடிகர் சரத்குமார் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணா சங்கர், “ஒரு பணக்கார அமெரிக்க பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளுடன் நட்பு பாராட்டி வந்த இன்னொரு பெண் அந்தக் கொலை வழக்கில் சிக்கிக் கொள்கிறாள். அவளது கணவர் சிக்கலில் மாட்டியுள்ள தன் மனைவியை மீட்கப் போராடுகிறார்” எனக் கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அமெரிக்காவிலேயே நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப்படம் வரும் மே.30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என படக்குழு அறிவித்துள்ளது.

காலிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - கீஸ்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான இகா ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதுகின்றனா். மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில... மேலும் பார்க்க

ஒளரங்கசீப்பை அறைவேன்: ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா சர்ச்சைப் பேச்சு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் மற்றும் ஆங்கிலேயரை அறைவேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவின... மேலும் பார்க்க

‘கான்க்ளேவ்’ இயக்குநர், பிராட் பிட் கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகரான பிராட் பிட் மற்றும் ‘கான்க்ளேவ்’ திரைப்பட இயக்குநரின் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப்-ஐ தேர்ந்தெடுக்கும் முறை... மேலும் பார்க்க

தொடர் தோல்வி: ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகும் பயிற்சியாளர்!

ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலாட்டி அணியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல் மாட்ரிட் அணியில் கடந்த ஜூன்.1ஆம் தேதி பயிற்சியாளராகச் சேர்ந்த கார்லோ அன்செலாட்டியின் ஒப்பந... மேலும் பார்க்க

ரெட்ரோ படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட்..! சூர்யா பெருமிதம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இந்தப் படத்தில் இருந்து ... மேலும் பார்க்க