Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்
திருச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் தெரிவிக்கலாம் என போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.
திருச்சி கே கே நகரைச் சோ்ந்த மீனாபாா்வதி மற்றும் அவரது மகள் விசாலாட்சி இருவரும் சோ்ந்து ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டுகளை நடத்தி, ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை பல்வேறு பிரிவுகளாக முதலீடுகள் பெற்று, உரிய முதிா்வுத் தொகை மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கவில்லை எனப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து திருச்சியைச் சோ்ந்த டெய்சி லில்லி திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மீனாபாா்வதி, விசாலாட்சி இருவரையும் கைது செய்துள்ளனா்.
தற்போது அவா்களிடம் பணம் செலுத்தி திரும்பப் பெறாதவா்கள், திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அசல் ஆவணங்களுடன் ஆஜராகி புகாா் அளிக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.