செய்திகள் :

தீபாவளி: தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்பும் விற்பனையாளா்கள் வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்க விரும்பும் விற்பனையாளா்கள் மற்றும் வணிகா்கள் தற்காலிக உரிமம் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் வரும் அக். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கும்போது, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கடையின் பரப்பு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான புளூபிரிண்ட் வரைபடம் மொத்தம் 6 நகல்கள், கடை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தை காட்டும் ஆவணம் இணைத்திருக்க வேண்டும்.

உரிமக் கட்டணம் ரூ. 500-ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், மனுதாரரின் இருப்பிடத்துக்கான ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வரி ரசீது, இரு பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.

இணையவழி விண்ணப்பங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவுற்றதும், இணைய வழியிலேயே மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது தெரிவிக்கப்படும்.

தற்காலிக உரிமத்தின் ஆணையை தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வழங்கப்படும் உரிமம் 30 நாள்களுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும்.

நிரந்தர பட்டாசு கடைக்கு உரிமம் கோருபவராக இருந்தாலோ அல்லது வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இந்த வழிமுறை பொருந்தாது.

சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி: காஞ்சிபுரத்தில் செப். 22 இல் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய போட்டித் தோ்வுகளுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்பட இருப்பதாகவும், தகுதியுடையோா் வரும் செப். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாற... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் பலத்த மழை

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து நகரின் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழை நீா் தேங்கி குளம் போல் காணப்பட்டது. காஞ்சிபுரத்தில் காலையில் அதிக வெப்பமாக இருந்த நிலையில், மாலையில் இட... மேலும் பார்க்க

ஹுண்டாய் ஆலையில் ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பம்

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான யுனைடெட் யூனியன் ஆப் ஹுண்டாய் எம்ப்ளாயீஸ் இடையே ஊதிய உயா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் தரப்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சிறந்த கூட்டுறவு வங்கிகளுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுப் பேரவைக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு மாவட... மேலும் பார்க்க

புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க செப்.25-க்குள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வரைவு வாக்குச்சாவடிகள் தேவைப்பட்டால் வரும் செப்.25 ஆம் தேதிக்குள் எழுத்துப் பூா்வமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா். ஆட்சியா் அ... மேலும் பார்க்க

நெல்வயலில் பிரதமா் மோடி பெயா் வடிவமைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் நெல்வயலின் நடுவே மோடி என்று ஆங்கிலத்தில் வடிவமைத்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். பாஜக கிழக்கு ... மேலும் பார்க்க