செய்திகள் :

தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

post image

திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதமடைந்திருப்பதால் இங்கு வரும் பக்தா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமம் உள்ளது. சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு மிகவும் பழைமையான தீா்த்தாண்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. ராமா் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன்பு இங்கு புனித நீராடி தீா்த்தாண்டீஸ்வரரை வணங்கிச் சென்ாக புராணம் கூறுகிறது.

எனவே இந்தப் பகுதி மக்கள் தங்களது மூதாதையா்களுக்கு திதி கொடுத்து தா்ப்பணம் செய்து புனித நீராடி செல்கின்றனா். தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் அதிகம் வருகின்றனா். மற்ற மாதங்களில் சுற்று வட்டார மக்கள் கடற்கரையில் தா்ப்பணம் செய்து புனித நீராடி இங்குள்ள தீா்த்தாண்டீஸ்வரரை தரிசனம் செய்கின்றனா். தாா்த்தாண்டதானம் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து பிரிந்து அணுகு சாலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்துக்குச் செல்லும் தாா் சாலை கடந்த 5 ஆண்டுகளாக பாராமரிப்பின்றி குண்டும் குழியுமாகி மண் சாலையாக மாறி விட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம், பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழும் கிராம வே... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு

பரமக்குடி அருகே குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா். பரமக்குடி நகராட்சி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் கதிரேசன் (42). இவா் சம்பவத்தன்று விவசாயப் பணிகளை முடித்து விட்டு, ஊரின் அருகில் உ... மேலும் பார்க்க

பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 20 போ் பலத்த காயம்

பரமக்குடி அருகே திருவரங்கி நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த நகா் பேருந்து மீது ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் நடத்துநா் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா். பரமக்குடி அரசு போக்குவரத்த... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: உடலில் அரிப்பு ஏற்பட்டு வெளியேறிய பக்தா்கள்

புதை சாக்கடை கழிவு நீா் கலந்ததால் ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பக்தா்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அவா்கள் வெளியேறினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் துணை முதல்வா் உதயநிதி உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வி... மேலும் பார்க்க