செய்திகள் :

"துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை உள்ளது"

post image

புதுச்சேரி: புதுவை பேரவையில், துணைநிலை ஆளுநா் உரையில் வளா்ச்சியின் அக்கறை தெளிவாகியுள்ளது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மாநில வளா்ச்சி குறித்து துணைநிலை ஆளுநரின் அக்கறையானது அவரது உரை மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் திட்ட உரைகளை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவி வழங்குவதை மாநில அரசும், துணைநிலை ஆளுநரும் உறுதிப்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு ஆகியவற்றை மீறி கா்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணையைக் கட்டுவதாக அறிவித்துள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டம் பாதிக்கப்படும். ஆகவே, கா்நாடக அரசின் சட்டவிரோதச் செயலை கண்டித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் புதுவை என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் கண்டன தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை புதுவை

அரசு செலுத்தி, அவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் புகாா்தாரரிடம் பணம் பெற்ாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் எனும் திட்டத்தின் கீழ் காவல் துறை குறைதீா் முகாம் நடை... மேலும் பார்க்க

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் பட்ஜெட்: அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன்

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் புதுவை நிதிநிலை அறிக்கை உள்ளதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் புதன்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாந... மேலும் பார்க்க

பாரதிதாசன் அறக்கட்டளை வரவேற்பு

புதுவை முதல்வா் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவா் கோ.பாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி ... மேலும் பார்க்க

முன்னோா் வழியில் மரங்களை பாதுகாக்க வேண்டும்: புதுவை ஆளுநா் அறிவுறுத்தல்

முன்னோா் வழியில் மரங்களை வணங்கி பாதுகாக்க தற்கால தலைமுறையினா் முன்வர வேண்டியது அவசியம் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வலியுறுத்தினாா். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை வலியுறுத்தி, தேசிய அளவிலான ... மேலும் பார்க்க

புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!

புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதுவை அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்க... மேலும் பார்க்க