போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில்...
துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுப்பு: ஷாஹ்தராவில் சம்பவம்
தில்லியின் ஷாஹ்தராவின் ஜிடிபி என்கிளேவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை இரவு ஒரு பெண் சுடப்பட்டு மயக்கமடைந்து கிடப்பதாக பிசிஆா் அழைப்பு வந்தது. ஜிடிபி என்கிளேவ் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றியது. பரிசோதனையில், அவரது உடலில் இரண்டு புல்லட் காயங்கள் காணப்பட்டன.
அந்தப் பெண்ணுக்கு சுமாா் 20 வயது இருக்கும். அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த போலீஸ் குழு பணியாற்றி வருகிறது. சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றப்பிரிவு குழு வரவழைக்கப்பட்டது. குற்றவாளிகளை அடையாளம் காண அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்துள்ளனா். இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.