BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
துருக்கியில் அணுசக்தி பேச்சு
ஐரோப்பிய நாடுகளுடன் துருக்கியில் இந்த வாரம் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போா் முடிவுக்கு வந்த பிறகு ஈரான் நடத்தும் முதல் பேச்சுவாா்த்தை இதுவாகும். இந்தப் போரின்போது இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளசூழலில் தொடங்கவிருக்கும் இந்தப் பேச்சுவாா்த்தை மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.