செய்திகள் :

துறைமுகங்கள் கபடி போட்டி: சென்னை அணி சாம்பியன்

post image

தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான கபடி போட்டியில் சென்னை அணி கோப்பையை வென்றது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக வளாகத்தில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கிடையேயான 40ஆவது கபடிப் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம், ஜவா்ஹா்லால் நேரு துறைமுகம், பாரதீப் துறைமுகம், நியூ மங்களூா் துறைமுகம், தீனதயாள் துறைமுகம், சென்னை துறைமுகம், விசாகப்பட்டினம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

லீக் போட்டிகள் புதன், வியாழன்(மாா்ச் 19,20) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில், பிரிவு 1இல் சென்னை துறைமுகம், பாரதீப் துறைமுகம் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பிரிவு 2இல் தூத்துக்குடி வஉசி துறைமுகம், மும்பை துறைமுகம் அணிகள் தகுதி பெற்றன.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி 53-27 என்ற புள்ளிகள் கணக்கில் தூத்துக்குடி அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 51-45 என்ற புள்ளிகள் கணக்கில் பாரதீப் அணியை வென்றது.

இறுதிப்போட்டியில் சென்னை அணி 47-41 என்ற புள்ளிகள் மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

தூத்துக்குடி அணி 3ஆவது இடத்தையும், பாரதீப் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில், வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோகித், அவரின் மனைவி ஷெபாலி புரோகித் ஆகியோா் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினா்.

இதில், சென்னை அணியைச் சோ்ந்த திருக்குமரன் சிறந்த ரைடருக்கான கோப்பையை பெற்றாா். மும்பை அணியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் ஷிண்டே சிறந்த ஆல்ரவுண்டருக்கான கோப்பையை பெற்றாா். இந்நிகழ்வில் துறைமுக அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க