துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள்: விடியல் பிறந்தது; சோதனை முடிந்தது - முழுப்பலன்கள் இதோ!
1. உங்கள் ராசிக்கு 9-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். இந்த நிலை மிகப் பெரிய வரப்பிரசாதம். நீங்கள் வெளிச்சத்துக்கு வரப்போகும் காலம். பிரச்னைகளால் சோர்ந்து போனவர்களுக்கு விடியல் பிறக்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.
2. எதிலும் வளைந்துக் கொடுத்தால் வானளவு உயரலாம் என்பதை உணர்வீர்கள். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்ப சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும்.
3. எல்லா வகைகளிலும் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பிரிந்திருந்தவர்கள், ஒன்று சேர்வார்கள். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

4. இதுவரையிலும் வாடகை வீட்டில் இருப்போர், சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். மகனுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமணம், இப்போது கூடி வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.
5. ராசியைக் குரு பார்ப்பதால், சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும். தோற்றப்பொலிவு கூடும். தயக்கம் தடுமாற்றம் எல்லாம் நீங்கும். கையில் நாலு காசு தங்கும். வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
6. குரு பகவான் 3-ம் இடத்தைக் குரு பகவான் பார்ப்பதால், எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பலருக்கும் நகை, ஆபரணங்கள் சேரும். சொத்துச் சேர்க்கை உண்டு. செய்தொழிலில் இருந்து வந்த கடின நிலைகள் மாறும்.
7. குரு பகவான் 5-ம் இடத்தைப் பார்வையிடுவதால், பிள்ளைகளால் ஆதாயம், பெருமை வந்து சேரும். வெகு காலமாகப் பிள்ளைப் பாக்கியத்துக்காகக் காத்திருந்த அன்பர்களுக்கு, பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
8. வருமானம் உயரும் என்பதால், வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எடுத்த காரியங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
9. வியாபாரத்தில், பெரிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். அனுபவசாலிகளைப் பணியில் அமர்த்துவீர்கள். நவீன உத்திகளால் வாடிக்கை யாளர்களைக் கவர்வீர்கள். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

10. உத்தியோகத்தில், பதவி உயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். மேலதிகாரி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் தருவார். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்குப் புது சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். தக்கபடி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
11. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் திருப்புறம்பியம். சரித்திரப் பெருமை பெற்ற ஊர். ஜன்ம நட்சத்திர தினம் அல்லது செவ்வாய்க்கிழமைகளில், இங்கு அருளும் ஈஸ்வரரான சாட்சிநாதரையும், அம்பாள் கரும்படுசொல்லம்மை யையும் தரிசித்து வஸ்திரம் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்.