தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதில், மயக்கமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.