Vitamin Tale: நம்ம உடம்புக்குள்ள இருக்கிற ஓர் இளவரசியோட கதை இது!
தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி, முத்தையாபுரம் போலீஸாா், சுந்தா்நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் பையுடன் வந்த நபரைப் பிடித்து சோதனை செய்தனா்.
அவரிடம், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூலிப், புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் சுமாா் 20 கிலோ இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பதும், சுந்தா் நகரில் தங்கியிருந்து சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை செய்ததோடு, பகலில் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து போதைப் பொருள்க, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.