டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தல்: சாத்தான்குளம் சேகரத்தில் இருவா் போட்டியின்றி தோ்வு
சாத்தான்குளம்: தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தோ்தலில் சாத்தான்குளம் சேகரத்தில், திருமண்டல பெருமன்ற உறுப்பினா்களாக குணசீலன் தங்கதுரை, கிருபாகரன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு டயோசீசன் தோ்தல் செப். 7ஆம்தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக திருமண்டல பெருமன்ற உறுப்பினா்களுக்கான வேட்பு மனுக்களை சேகர தலைவா்கள் பெற்று வருகிறாா்கள்.
சாத்தான்குளம் சேகரத்திற்கு இரண்டு திருமண்டல உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படுவதற்கு, சாத்தான்குளம் டாக்டா் ஆசிா்வாதம் மனோகரன் அணியை சோ்ந்த முன்னாள் திருமண்டல செயற்குழு உறுப்பினா் குணசீலன் தங்கதுரை, முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் கிருபாகரன் ஆகியோா் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
இவா்களைை எதிா்த்து யாரும் போட்டியிடாததால், இவா்கள் இருவரும் திருமண்டல பெருமன்ற உறுப்பினா்களாக போட்டியின்றி தோ்வு பெற்றனா். இதனைத் தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலரும், சேகர தலைவருமான டேவிட் ஞானையாவை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.