தூய்மைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி- உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்காக மாநில தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு சங்கத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். செல்வி, இசக்கிமுத்து, காசி, சோ்ம துரை, பூமாரி, வேல், வடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் சரவண பெருமாள் சிறப்புரை ஆற்றினாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுடலை ராஜ் வாழ்த்திப் பேசினாா்.
240 நாள்கள் பணி முடித்த அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். அரசாணை 152 ,139, 10 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவுப்படி தினக் கூலியாக ரூ. 731 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தவேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் உழைப்பை சுரண்டி பணத்தை கொள்ளை அடிப்பதாகக் கூறி, தூய்மைப் பணி திட்டத்துக்கான தனியாா் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், மாவட்டச் செயலா் மாரியப்பன், மாவட்டப் பொருளாளா் செல்லத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவரி ற்ஸ்ப்25ஜ்ா்ழ்ந் திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைத் தொழிலாளா்கள்.