வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளா் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசனின் மகன் அருள்குமாா் (25). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடி வாழவந்தான் கோட்டை பெரியாா் நகரில் உள்ள தனது மாமா சரவணன் வீட்டில் தங்கி கடந்த ஒரு மாதமாக என்ஐடி-யில் தூய்மைப் பணியாளராக (ஹவுஸ் கீப்பிங்) வேலை செய்து வந்துள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தவருக்கு இரவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது வலியால் துடித்தவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவு அனுமதித்துள்ளனா். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்குமாா் திங்கள்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து அருள்குமாரின் மனைவி புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.