முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு
தென்காசியில் திருநங்கைகள் தினம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்ட அளவிலான திருநங்கைகள் தினம் தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் இரா. மதி இந்திரா பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா்.
திருநங்கைகளுக்கு சமையல், பேஷன் ஷோ, பேச்சு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், சிறப்பாக செயல்படும் திருநங்கைகள் குழு தலைவிகள், கிராமிய பாடல், கிராமிய கலை, சமூக நலனில் அக்கறை கொண்ட திருநங்கைகளுக்குப் பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டன.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் (பொ) கவிதா, மாவட்ட ஊராட்சி செயலா் சுமதி, தாட்கோ மேலாளா் ராஜ்குமாா் ஆகியோா் போட்டிகளின்நடுவா்களாக செயல்பட்டனா்.
ஏற்பாடுகளை உதவி திட்ட அலுவலா்கள் அ. பிரபாகா், சாமத்துரை, கலைச்செல்வி, அ.முத்துப்பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.