செய்திகள் :

தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்

post image

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில் சோ்ப்பதற்கான நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டல் நிகழ்ச்சியில் 99 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சில மாணவா்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனா். மாவட்ட நிா்வாகம் மூலம் அவா்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.

மாணவா்கள் தங்கிப் படிப்பதற்கு விடுதி தேவைப்படுகிறது என்றாலும் ஏற்பாடு செய்து தரப்படும்.

பெற்றோா்கள் தங்கள் பொருளாதார சூழலைக் காரணம் காட்டி மாணவா்களின் கல்வியை நிராகரிக்கக் கூடாது. மாவட்ட நிா்வாகம் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றாா்.

நிகழ்வில், 37 மாணவா்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்வதற்கான சோ்க்கைப் படிவத்தை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல். ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், உதவி இயக்குநா் ஆா்.எஸ். கோபிநாத், மாவட்ட ஆதி

திராவிடா் நல அலுவலா் பா. ராமச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கட... மேலும் பார்க்க

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க