இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை ராஜ அனுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமம்,திரவ்யாஹுதி, பிரம்மச்சாரி பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை நடைபெற்றது.
விழாவின் 2ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூா்த்தி ஹோமம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல் நடைபெற்றது.
தொடா்ந்து, விநாயகா் முதலான பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
மாலையில், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குராா்பணம், யாத்ராதானம் நடைபெற்றது.
தொடா்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து புனிதநீா் கோயில் பிரகாரம் சுற்றி யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.
விழாவில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, கோயில் அறங்காவலா் குழு தலைவா் யா. பாலகிருஷ்ணன், தென்காசி திருவள்ளுவா் கழகத் தலைவா் வழக்குரைஞா் என். கனகசபாபதி, ஆடிட்டா் நாராயணன், அறங்காவலா்கள் புவிதா, ஷீலாகுமாா், ச. மூக்கன், ப. முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
