செய்திகள் :

தென்காசி: `செரிமானக் கோளாறு' - காட்டை விட்டு வெளியே வந்த யானைக்கு வனத்துறை சிகிச்சை

post image

தென்காசி வன கோட்டம் கடையநல்லூர் வனச்சரகம், சொக்கம்பட்டி பிரிவுக்கு அருகில் வயது முதிர்ந்த யானையின் நடமாட்டத்தை 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று காலை சொக்கம்பட்டி காவல் நிலையம் பின்புறம் உள்ள தனியார் தோட்டத்திற்கு வந்த யானை, வயது முதிர்வு காரணமாக அங்கு வெகுநேரம் நின்றிருந்தது.

சொக்கம்பட்டி
சொக்கம்பட்டி

இதனால் அதற்கு சிகிச்சையளிக்க, மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் அவர்களின் உத்தரவின் பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் வனச்சரக பணியாளர்களுடன் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

யானை சற்று சோர்வுடன் கடந்த சில மாதங்களாக காணப்பட்டு வந்ததால், யானையின் உடல் மற்றும் யானை லத்தி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

கால்நடை மருத்துவர் யானையை ஆராய்ந்ததில், செரிமானக் கோளாறு காரணமாக யானை காட்டை விட்டு வெளியே வந்ததாக தெரிவித்தார். யானையின் உணவு செரிமானம் இன்றி காணப்பட்டது. அதனை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். பின்னர் யானைக்கு தேவையான மருந்துகள் ராகிகளி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

யானையை கண்காணிக்கும் வனத்துறையினர்
யானையை கண்காணிக்கும் வனத்துறையினர்

யானையை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையானபோது மருந்துகள் வழங்கவும் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தென்காசி வனச்சரக வனத்துறையினர் யானையை காட்டிற்குள் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

மீண்டும் யானை காட்டை விட்டு வெளியே வராதவாறு, கடையநல்லூர் வனச்சரக பணியாளர்கள் இரவு கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை.

விவசாயிகள், வன உயிரினங்களை பார்த்தால் உடனடியாக கடையநல்லூர் வனச்சரக அலுவலருக்கு 9788578344 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், யானை போன்ற வன விலங்குகளை கண்டால், பொதுமக்கள் புகைப்படம் எடுக்கவோ அல்லது அதனைத் துன்புறுத்தவோ செய்யக்கூடாது என வனத்துறை தெரிவித்துள்ளது.

Gold: ரூ.9.5 கோடி தங்க ஆடை; கின்னஸ் சாதனை -Viral Video

துபாய் என்றாலே ஆடம்பரமும் பிரமிப்பும் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக தங்க நகைகளுக்கும், அதன் டிசைன்களுக்கும் குறிப்பிடத்தக்க இடத்தை தக்கவைத்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற மற்ற... மேலும் பார்க்க

Pooja Hegde:``Diwali is hereeee" - நடிகை பூஜா ஹெக்டேவின் வைரல் கிளிக்ஸ் | Photo Album

Pooja Hegde: ``எல்லை மீறி விமர்சனங்கள்; பணம் கொடுத்தால் அகற்றுவோம் என்கிறார்கள்!'' - பூஜா ஹெக்டே மேலும் பார்க்க

Ajith: `தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும்.!' - பாராட்டிய பார்த்திபன்; நன்றி தெரிவித்த அஜித்

நடிகர் அஜித் ஸ்பெயினில் தன்ன சந்தித்த ரசிகர்கள் விசிலடித்தபோது, நடிகர் அஜித் தன் பார்வையாலும், சைகையாலும் அதைக் கண்டித்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நடிகர் பார்த்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: `ஏ, தள்ளு, தள்ளு' - நடுரோட்டில் இறங்கி தள்ளிய பயணிகள்; வைரலான அரசு பேருந்து

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மல்லி வழியாக திருத்தங்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென பழுதாகி பாதி வ... மேலும் பார்க்க

ஜப்பான்: 2 வருடமாக பணம் கொடுக்காமல் சாப்பிட்ட இளைஞர்; உணவு டெலிவரி நிறுவனத்திடம் சிக்கியது எப்படி?

ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், உணவு டெலிவரி செயலியை ஏமாற்றி 2 ஆண்டுகளில் 1,095 ஆர்டர்கள், கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் மதிப்பிலான உணவுகளை இலவசமாகச் சாப்பிட்டிருக்கிறார். ஜப்பானில் நாகோயா என்ற பகுதியில் வசிக்... மேலும் பார்க்க

தென்காசி: 2 நாளில் 27 நபர்களைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்; பதறவைக்கும் CCTV காட்சிகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்திக் கடிப்பத... மேலும் பார்க்க