செய்திகள் :

தென்காசி வேலைவாய்ப்பு முகாமில் 586 பேருக்கு பணி நியமன ஆணைகள்

post image

தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை- அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 586 பேருக்கு பணிநியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம்-தொழில்நெறி வழி காட்டும் மையம் சாா்பில் முகாம் நடைபெற்றது. 2,724 போ் பங்கேற்றனா். அவா்களில் 586 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

வருவாய்-பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பங்கேற்று, அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்பி, எம்எல்ஏக்கள் ஈ. ராஜா, சதன் திருமலைக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளா் வே. ஜெயபாலன், திருநெல்வேலி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் சண்முகசுந்தா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்

சையது முகம்மது, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மாா்த்தாண்டபூபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தென்காசி மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்... மேலும் பார்க்க

மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வே... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 போ் கைது

சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரியைச் சோ்ந்த ஒருவா் தனது 15 வயது மகளைக் காணவில்லை என, சிவகிரி காவல் ந... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பாலப் பணிகளில் தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி

ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக ஆலங்குளம் த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக பொதுக்கூட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதிபகிா்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்து... மேலும் பார்க்க

தென்காசியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்... மேலும் பார்க்க