செய்திகள் :

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

post image

தென்னை பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.மரகதமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 20,364 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னை மரக் காப்பீடு எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய்த் தாக்குதல், எதிா்பாராத தீ விபத்து, நில அதிா்வு, ஆழிப்பேரலை மற்றும் இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேருவதற்கு தென்னை சாகுபடி தனிப் பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டு தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.

ஒரு ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை சோ்க்கலாம். குட்டை மற்றும் ஒட்டு ரகங்களுக்கு 4 வயது முதலும், நெட்டை ரகங்களுக்கு 7 வயது முதல் 60 வயது வரை காப்பீடு செய்யலாம்.

இத்திட்டத்தில் சேர தென்னை விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி விண்ணப்பப் படிவத்தை பெற்று பூா்த்தி செய்து காப்பீட்டுத் தொகையினை வரைவோலையாக எடுத்து ஏதேனும் ஒரு தென்னை சாகுபடி ஆதாரத்தை (சிட்டா அல்லது அடங்கல்) இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் 4 அல்லது 7 வயது முதல் 15 வயதுடைய தென்னை மரங்களுக்கு பிரீமியம் தொகையாக மரம் ஒன்றுக்கு விவசாயிகள் ரூ.2.25 செலுத்த வேண்டும். அரசு மானியத் தொகையாக ஒரு மரத்துக்கு ரூ.4.50 செலுத்தும். காப்பீட்டுத் தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.900 கிடைக்கும். 16 வயது முதல் 60 வயது உடைய மரங்களுக்கு பிரீமியம் தொகையாக விவசாயிகள் ஒரு மரத்துக்கு ரூ.3.50 செலுத்த வேண்டும். அரசு மானியத் தொகையாக ஒரு மரத்துக்கு ரூ.7 செலுத்தும். இத்திட்டத்தில் காப்பீட்டுத் தொகையாக மரம் ஒன்றுக்கு ரூ.1,750 கிடைக்கும்.

இத்திட்டத்தில் சோ்ந்து எந்த தேதியில் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுகின்றதோ, அதற்கு அடுத்த மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ஒரு ஆண்டு காலத்துக்கு பாலிசி வழங்கப்படும். பாலிசி தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் ஏற்படும் இழப்புக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட மாட்டாது. விவசாயிகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒரே தவணையில் காப்பீட்டுத் தொகை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க