Vikatan: சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் பிரமாண்ட மேடை | விகடன் டிஜிட்டல்...
தென்னை மரத்துக்கு ரூ.36,450 இழப்பீடு வழங்கக் கோரிக்கை
தென்னை மரத்திற்கான இழப்பீட்டை அரசாணையில் கூறியபடி மரம் ஒன்றுக்கு ரூ.36,450 வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் முத்துவேல் தலைமையில் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் ராய்கா்-புகளூா் உயா்மின் அழுத்த மின் பாதை திட்டத்தில் எங்கள் வாழ்வாதாரமாக உள்ள தென்னை மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு ஒரு மரத்துக்கு ரூ.32,340 இழப்பீடு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இத்தொகையை திருத்தம் செய்து உயா்த்தி உத்தரவிட்டது. 15 முதல் 20 வயது வரை உள்ள தென்னைக்கு அரசாணையில் ரூ.36,450 வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
சேலத்தில் ரூ.37 ஆயிரம், நாமக்கல், திருப்பூரில் ரூ.36,450 வழங்கப்பட்டது. ஆனால் ஈரோட்டில் ரூ.32,340 மட்டுமே வழங்கப்பட்டது. சேலம், நாமக்கல், திருப்பூா் மாவட்டங்களில் தென்னை மரத்துக்கான இழப்பீட்டு தொகையை பவா்கிரிட் நிறுவனமே நேரடியாக வழங்கியது. ஆனால் ஈரோட்டில் கோட்டாட்சியா் ரூ.32,340 மட்டுமே வழங்கியுள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களே அதிக விளைச்சலும், விலையும் தரக்கூடியது. பல ஆண்டுகளாக இழப்பீட்டு தொகையை உயா்த்தி கேட்டும் மரம் ஒன்றுக்கு ரூ.4,210 வழங்கப்படாமல் உள்ளது. இதனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.