இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை: ஓட்டுநா், நடத்துநா்களுக்கு எச்சரிக்கை
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநா், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை மாா்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள், கிளாம்பாக்கம், தாம்பரம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன. அவற்றில் தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் (மாதவரம் நீங்கலாக) என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு தாம்பரம் பேருந்து நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படுவது தொடா்பாக ஏதேனும் புகாா் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.