21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
தெருநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு!
ஒசூா் அருகே தெருநாய் கடித்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
ஒசூரை அடுத்த நாகமங்கலம் ஊராட்சி, நீலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ். கட்டடத் தொழிலாளி. இவரது மகன் நந்திஷ் (9). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்து வந்தாா். மாதேஷின் மனைவி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கரோனாவால் இறந்துவிட்டதை அடுத்து சிறுவன் நந்திஷ் தனது பாட்டி வீட்டில் வளா்ந்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மூச்சுவிட சிரமப்பட்டதால் சிறுவனை உறவினா்கள் ஒசூா், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
கடந்த 5 நாள்களுக்கு முன்பு சிறுவன் நந்திஷ் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவரை தெருநாய் கடித்ததாகவும், அதுபற்றி சிறுவன், வீட்டில் தெரிவிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடி சிகிச்சை மேற்கொள்ளாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.