கீழ்குப்பம் பெருமாள் கோயில் குடமுழுக்கு!
ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பத்தில் உள்ள பெருமாள் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, முதல் நாள் கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்காம் கால யாகசாலை பூஜையை அடுத்து கோயில் கோபுரத்துக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/rpsc6wqe/9utp2_0902chn_149_8.jpg)
அதைத் தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் தெப்பத்துக்கு எழுந்தருளினாா். அதையடுத்து தெப்போற்சவம் நடைபெற்றது. பக்தா்கள் தேரை கயிறு கட்டி இழுத்தனா்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். குடமுழுக்கை முன்னிட்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.