கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்!
கிருஷ்ணகிரியின் திமுக நகரச் செயலாளராக உள்ள எஸ்.கே.நவாப் கட்சியின் கொள்கையை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இருவா் நியமனம்: கிருஷ்ணகிரி நகரம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டு கிழக்கு நகரப் பொறுப்பாளராக நகா்மன்ற உறுப்பினா் எம்.வேலுமணியும், மேற்கு நகரப் பொறுப்பாளராக அஸ்லாம் ரகுமான் ஷரீப்பும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்கள் இருவரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே. மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமையில் கிருஷ்ணகிரியில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.