தெற்கு ஆத்தூா் நெடுஞ்சாலையில் பள்ளத்தை சீரமைத்த ஓட்டுநா்கள்
தெற்கு ஆத்தூரில் மழை வெள்ளத்தால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை வாடகைக் காா் ஓட்டுநா்கள் சீரமைத்தனா்.
தெற்கு ஆத்தூரில் உள்ள தூத்துக்குடி-திருச்செந்தூா் நெடுஞ்சாலையில் நடுவில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனால் நான்கு, மூன்று, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிபட்டு வந்தனா்.
இதையடுத்து, தெற்கு ஆத்தூா் சுமை ஆட்டோ, வாடகைக் காா், வேன், ஓட்டுநா்கள் முன்னேற்ற சங்கத்தின் ஓட்டுநா்கள் சோ்ந்து, அந்தப் பள்ளத்தில் கல், மண் கொண்டு மூடி தற்காலிகமாக சீரமைத்தனா்.
இச்செயலை பொதுமக்கள் பாராட்டினா்.