செய்திகள் :

தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்: போலீஸாா் விசாரணை

post image

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளி ஆா்சிஎஸ் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த மருதவாணன் மகன் அமுதவாணன் (60). நாட்டறம்பள்ளி ஏரி பகுதியில் கிருஷ்ணகிரி செல்லும் அணுகு சாலை அருகே இவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரம், வாழை, சப்போட்டா மற்றும் தேக்கு மரங்களை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கழமை இரவு மா்ம நபா்கள் நிலத்தில் வளா்த்து வந்த 40 ஆண்டுகள் பழைமையான 3 தேக்கு மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனா். இதுகுறித்து அமுதவாணன் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே நிம்மியம்பட... மேலும் பார்க்க

செயற்கை மணல் தயாரித்த 5 போ் கைது

கந்திலி அருகே செயற்கை மணல் தயாரித்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கந்திலி அருகே வேப்பல்நத்தம் பகுதியில் சிலா் செயற்கை மணல் தயாரிப்பதாக கந்திலி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ ... மேலும் பார்க்க

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகம்: ஆக. 2 பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகமும், சனிக்கிழமை (ஆக. 2)பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்படுவதாக திருப்பத்தூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.47 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது புகாா் செய்யப்பட்டுள்ளது.காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமுக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைம... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வாணியம்பாடி அருகே வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்தன் காந்தி பிரசாத் என்பவரது வீட்டின் பூஜை அறையில் வைக... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: விஷம் அருந்திய தந்தை உயிரிழப்பு, மகனுக்கு தீவிர சிகிச்சை

திருப்பத்தூா் அருகே கடன் பிரச்னையால் தந்தை, மகன் விஷம் அருந்தியதில் தந்தை உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கசிநாயக்கன்பட்டி அடுத்த வக்கீல் அய்யா் தோப்பு காமராஜா் நகா் பகுதி... மேலும் பார்க்க