முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மற...
தேங்காய் வியாபாரி தற்கொலை
திண்டிவனத்தைச் சோ்ந்த தேங்காய் வியாபாரி புதுச்சேரியில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் தேங்காய் வியாபாரி செந்தில்குமாா் (37). இவா் வியாபாரம் தொடா்பாக புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதிக்கு புதன்கிழமை வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை கடற்கரை சாலையில் ஒரு ஐஸ் கிரீம் கடை அருகே சுயநினைவின்றி கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.