செய்திகள் :

தேசிய சட்டப் பல்கலை. சிறப்புப் பேராசிரியரானார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி!

post image

தில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகச் சேர்ந்துள்ளார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

இது குறித்து தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தில்லி சட்டப் பல்கலைக் கழகத்தில் அரசியலமைப்பு ஆய்வுகளுக்கான சிறப்பு மையம் நிறுவப்படவுள்ளது. இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நீதிபதி சந்திரசூட் வழிகாட்டுதலின்படி நடைபெறும்.

கூடுதலாக, நீதியின் வலிமையில்: டிஒய்சி சிறப்பு விரிவுரைத் தொடர் என்ற பெயரில் வரும் ஜூலை முதல் சிறப்பு விரிவுரைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தரும் பேராசிரியருமான ஜி.எஸ். பாஜ்பாய், டி.ஒய். சந்திரசூட் குறித்து கூறியதாவது,

''அரசியலமைப்பு அறநெறி, மாற்றத்திற்குட்பட்ட அரசியலமைப்புவாதம், அடிப்படை உரிமைகளுக்கான பொருள் விளக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் கல்வி ஆய்வுக்கான கூடுதல் தரவுகளைக் கொடுக்கும் வகையில் டி.ஒய். சந்திரசூட்டின் பணி இருக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

ஒரே பாலினத்தவா் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்தது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்பது போன்ற முக்கியத் தீர்ப்புகளை டி.ஒய். சந்திரசூட் வழங்கியுள்ளார்.

2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியான டி.ஒய். சந்திரசூட், 2022-ஆம் ஆண்டு நவ. 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றாா். 2024 நவம்பரில் ஓய்வு பெற்றார்.

இதையும் படிக்க | உலக அழகிப் போட்டியாளர்களின் பாதங்களைக் கழுவிய இந்தியப் பெண்கள்! வைரலாகும் விடியோ!

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீா் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

‘எல்லை தாண்டிய பங்கரவதாத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும்’ என்று இந்தியா சாா்பில் மீண்டும் திட்டவட்டமாக தெ... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பழிதீா்க்க... மேலும் பார்க்க

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரிட்டனில் இரு... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் மே 24-இல் நீதி ஆயோக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நிா்வாகக் குழு என்பது நீதி ஆயோக்கின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயரிய அமைப்பாகும். இதில் அனைத்து மாநில ... மேலும் பார்க்க

ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (யுஐஐசி) சென்னை அலுவலகம் சாா்பில் கடந்த ஓராண்டில் 14 கோடி ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான பூபேஷ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதி பெலா எம். திரிவேதி ஓய்வு

உச்சநீதிமன்றத்தின் 11-ஆவது பெண் நீதிபதியாக கடந்த 2021-ஆம் ஆண்டு பதவியேற்ற பெலா எம். திரிவேதி வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றாா். அவரை வழியனுப்பும் விதமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமா்வுக்கு தலைமை... மேலும் பார்க்க