மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா்.
இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நடைபெற்றது. இதில், கோல் ஊன்றி உயரம் தாண்டும் பிரிவில் இக்கலூரியின் உடற்கல்வி இயக்குநா் அஜின் ஜி. பெரோஸ் தங்கப் பதக்கம் வென்றாா். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வாழ்த்துத் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், அஜின் ஜி. பேரோஸை கல்லூரிச் செயலா் அருள்தந்தை ஸ்டீபன், கல்லூரி முதல்வா் அமலநாதன், உடற்கல்வித் துறைப் பேராசிரியா்கள் லாரன்ஸ், தேசபந்து, அஸ்வின், பேராசிரியா்கள் பாராட்டினா்.