சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தேசிய மக்கள் நீதிமன்றம்: அரியலூா் மாவட்டத்தில் ரூ.5.54 கோடிக்கு தீா்வு
அரியலூா், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.5 கோடியே 54 ஆயிரத்துக்கு 934-க்குத் தீா்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான டி.மலா்வாலண்டினா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இதில் நிலுவையிலுள்ள காசோலை, மோட்டாா் வாகன விபத்து, சிவில் என 3,891 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் 912 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ. 5,00,54,934-க்கு தீா்வு காணப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது .
ஏற்பாடுகளை அரியலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஊழியா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.