இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்த...
தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி
தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் வழிபடுவதற்காக 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க காவல் துறை அனுமதி அளித்தது.
இந்து அமைப்புகள், கோயில் நிா்வாகம், குடியிருப்போா் நலச் சங்கம் ஆகியவை சிலைகளை அமைக்க உள்ளன. விநாயா் சிலை அமைக்கும் இடங்களில் தலா ஒரு காவலா் வீதம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.
சிலை அமைப்புக் குழு சாா்பில், தலா 2 போ் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க வேண்டும்.
மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று மாவட்ட காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
பெரியகுளத்தில் ஆக.27-ஆம் தேதி மாலையும், தேனி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், கூடலூா், தேவாரம், ராயப்பன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, போடி ஆகிய இடங்களில் ஆக.28-ஆம் தேதியும், சின்னமனூரில் ஆக.29-ஆம் தேதியும் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படும்.