தேமுதிகவினா் போராட்டம்: சுதீஷ் உள்ளிடோா் கைது
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்திய தேமுதிக மாநிலத் துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 வழங்கக் கோரி போராட்டம் நடத்துவதற்காக எல்.கே.சுதீஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகில் சனிக்கிழமை திரண்டனா். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி, அவா்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறையினா் கூறினா். ஆனால், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற போது, எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட தேமுதிகவினரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரையும் விடுவிடுவித்தனா்.
இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேமுதிக சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.