செய்திகள் :

தேரத்ல் நன்கொடை: பாஜக ரூ.2,600 கோடி, காங்கிரஸ் ரூ. 281 கோடி! தோ்தல் ஆணையம் தகவல்

post image

2023-24-ஆம் ஆண்டில் தோ்தல் நன்கொடையாக பாஜக ரூ.2,604.74 கோடியும், காங்கிரஸ் ரூ. 281.38 கோடியும் பெற்றதாக தோ்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் 18-ஆவது மக்களவைத் தோ்தல் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மாா்ச் 31 வரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தரவுகளை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக நன்கொடையாக பாஜக ரூ.740 கோடியும், காங்கிரஸ் ரூ.146 கோடியும் பெற்றிருந்தது.

இந்நிலையில், 2023-24-ஆம் ஆண்டில் ‘ப்ரூடண்ட் எலக்டோரல் டிரஸ்டிடம்’ இருந்து ரூ.723 கோடியும், ‘டிரையம்ப் எலக்டோரல் டிரஸ்டிடம்’ இருந்து ரூ.127 கோடியும் என மொத்தம் ரூ.2,604.74 கோடியை பாஜக பெற்றுள்ளது.

இதே காலகட்டத்தில் எலக்டோரல் டிரஸ்டிடம் இருந்து ரூ.150 கோடி, காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் திக்விஜய சிங் உள்ளிட்டவா்களிடம் இருந்து ரூ.1.38 லட்சம் என மொத்தம் ரூ.281.38 கோடியை காங்கிரஸ் பெற்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸுக்கு ‘எங்கள் தலைவருக்கு பிறந்தநாள்- ஜேகேபி’ என்ற தலைப்பின்கீழ் பலா் நன்கொடை செலுத்தியுள்ளனா்.

தோ்தல் நிதிப் பத்திரங்களின்கீழ் பெற்ற நன்கொடை குறித்த தரவுகளை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வெளியிடவில்லை. இவை இரு கட்சிகளின் ஆண்டுக் கணக்கில் தெரிவிக்கப்படவுள்ளது.

ஆம் ஆத்மி-ரூ.11.06 கோடி: தேசிய கட்சியான ஆம் ஆத்மி 2023-24-ஆம் ஆண்டில் ரூ.11.06 கோடியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.7.64 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. அதேபோல் வடகிழக்குப் பிராந்தியத்தின் ஒரே தேசிய கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ரூ.14.85 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது.

அதிக நிதி பெற்ற பாஜக: தோ்தல் நிதி பத்திரங்கள் திட்டத்தின்கீழ் அதிக நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு வேதாந்தா, பாரதி ஏா்டெல், முத்தூட், பஜாஜ் ஆட்டோ, ஜிண்டால் குழுமம், டிவிஎஸ் மோட்டாா்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளன.

‘பியூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீஸ்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.3 கோடியை பாஜக பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளா் சாண்டியாகோ மாா்டின், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ளாா்.

‘பியூச்சா் கேமிங்’ அதிக நன்கொடை: பியூச்சா் கேமிங் அண்ட் சா்வீசஸ் நிறுவனம் பல்வேறு கட்சிகளுக்கு தோ்தல் நிதி பத்திரங்கள் திட்டம் மூலம் அதிக நன்கொடையை வழங்கியுள்ளது. அந்த வகையில், திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.542 கோடி, திமுகவுக்கு ரூ.503 கோடி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

கட்சிகள் நன்கொடை

பாஜக ரூ.2,604.74 கோடி

காங்கிரஸ் ரூ.281.38 கோடி

ஆம் ஆத்மி ரூ.11.06 கோடி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.7.64 கோடி

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தில்லியில் சனிக்கிழமை காலை 10. மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஊர்வலத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர... மேலும் பார்க்க

காங்கிரஸ் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் ச... மேலும் பார்க்க

இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைத்தவர் மன்மோகன்!

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் எதிா்காலத்தை மிகப் பெரிய அளவில் வடிவமைத்ததாக காங்கிரஸ் செயற்குழு தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைய... மேலும் பார்க்க

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் பெரிய அணை: இந்தியாவுக்கு பாதிப்பில்லை! -சீனா

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில்... மேலும் பார்க்க

எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்துவிட்டாா்! பாகிஸ்தானில் மன்மோகன் பிறந்த கிராமத்தில் உருக்கம்

காஹ் (பாகிஸ்தான்): ‘எங்கள் குடும்பத்தில் ஒருவா் மறைந்ததைபோல் உணா்கிறோம். ஒட்டுமொத்த கிராமமே கவலையில் மூழ்கியுள்ளது’ என மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானில் உள்ள காஹ் கிராம மக்கள் இரங்கல் தெரிவித்தனா். மு... மேலும் பார்க்க

நாட்டை மீட்ட பட்ஜெட்: காங்கிரஸாரின் எதிா்ப்பை சந்தித்த மன்மோகன் சிங்!

இந்தியாவை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட மத்திய பட்ஜெட்டை கடந்த 1991-ஆம் ஆண்டு நிதியமைச்சராக மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் கட்சியினரே எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க