Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோ...
தேர்வு பயம் தீர...
திருமாலின் மற்றொரு வடிவம்தான் வராகர். பன்றியின் முகமும், மனித உடலும் கொண்ட உருவமாக பூமியை தனது கொம்பில் தாங்கி, காப்பதற்காக நாராயணன் உருவெடுத்தார். அரக்கனைக் கொன்று பூமியைக் காத்தார். இந்த ஊன உடம்புக்கு ஞானத்தை அருள வல்ல ஒரே தெய்வம் வராகர் எனும் ஞானபிரான் என்று ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கப்படுகிறது. பக்தர்கள், முக்தர்கள், நித்தியர்கள் என எல்லோருக்கும் மெய்யறிவு தரும் ஞானபிரான் வராகர்.
காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருநாராயணபுரம், மாமல்லபுரம், திருமலை, திருவிடந்தை, திருக்கடல்மல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட இடங்களில் வராகருக்கான கோயில்கள், சந்நிதிகள் அமைந்துள்ளன. சென்னை மயிலாப்பூரில் அருள்மிகு மாதவப்பெருமாள் கோயிலில் வராகப்பெருமாள் பூதேவித்தாயாரை காப்பாற்றிக் கொண்டுவரும் நிலையில் பரிவார சந்நிதி அமைந்துள்ளது.
இந்தச் சிறப்புடைய மாதவப் பெருமாள் கோயிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடையவும், பயமின்றி தேர்வை எதிர்கொள்ளவும், மனம் ஒன்றி படிக்கவும், சிறப்பு ஹோமமும், பூஜையும் பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 044 24985112.
}ஆர்.அனுராதா