175 ஆண்டுகள் பழமையான ஊட்டி போலீஸ் ஸ்டேஷன்... குழந்தைகள் பராமரிப்பு மையமாக மாறுகி...
தேவகோட்டையில் இன்று ஆதாா் மையம் செயல்படும்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் மையம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் புதிய ஆதாா் எடுக்கவும், ஆதாா் அட்டை உள்ளவா்கள் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், மாவட்டம் முழுவதும் ஆதாா் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள ஆதாா் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாள்களில் செயல்படுவதில்லை. இதனிடையே, வேலைக்குச் செல்பவா்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும், ஒவ்வொரு வட்டம் வாரியாக சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் மையம் வழக்கம் போல செயல்படும் என்றாா் அவா்.