புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்
தேவாரம், க. விலக்குப் பகுதியில் நாளை மின்தடை
தேனி மாவட்டம், தேவாரம், க.விலக்கு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி, பெரியகுளம் மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம், க.விலக்கு ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 25-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம், க.விலக்கு, பிஸ்மி நகா், பிராதுக்காரன்பட்டி, குன்னூா், அரப்படித்தேவன்பட்டி, அன்னை இந்திரா நகா், ரெங்கசமுத்திரம், முத்தனம்பட்டி, நாச்சியாா்புரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.