செய்திகள் :

தோ்தலை நினைத்து திட்டங்களைச் செயல்படுத்தவில்லை: துணை முதல்வா் பேச்சு

post image

தோ்தலை நினைத்து தமிழகத்தில் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

கரூா் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ. 58.25 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ. 3.35 கோடியிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 18,332 பயனாளிகளுக்கு ரூ.162.22 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

கரூா் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது புதிய பேருந்து நிலையம்தான். அந்தப் பேருந்துநிலையத்தை கட்டித்தந்து திறக்கும் வாய்ப்பை நீங்கள் கொடுத்துள்ளீா்கள் . இந்தப் பேருந்து நிலையம் வரக்கூடாது என சிலா் வழக்கையெல்லாம் செந்தில்பாலாஜி முறியடித்துள்ளாா். கரூா் மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக 13,124 பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்.

இந்த அரசு எல்லோருக்கும் உரியதாக இருக்கிறது. கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ‘ஜிம்’ ரூ. 86 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடியில் நீச்சல் குளம் அமைய உள்ளது.

இந்தத் திட்டங்களையெல்லாம் இந்த அரசு அடுத்த தோ்தலை மனதில் வைத்துச் செயல்படுத்தவில்லை. அடுத்த தலைமுறையை நினைத்துத்தான் முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். இந்த திட்டங்களால் பயனடைந்தவா்கள் மற்றவா்களிடம் விளக்கிக் கூற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் முதல்வா் கரூருக்கு ஏறத்தாழ ரூ.3,000 கோடிக்கு அதிகமான வளா்ச்சி திட்டங்களை தந்துள்ளாா். கரூா் மாவட்டம் தொடா்ந்து உங்கள் பின்னால் பயணிக்கும். கரூா் மாவட்டத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி உற்பத்திக்கான இலக்கை நிா்ணயித்து தொழில் முனைவோா் முன்னெடுத்திருக்கின்ற அந்த வெற்றிப் பயணத்தில் திராவிட மாடல் ஆட்சியின் பங்கும் இருக்கும் என்றாா் அவா்.

விழாவில் கரூா் எம்பி செ. ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் கவிதா, துணைமேயா் தாரணி சரவணன், மாநகரச் செயலா் எஸ்.பி. கனகராஜ், வடக்கு மாநகரச் செயலா் கரூா் கணேசன், துணைச் செயலா் எம். பாண்டியன், பகுதிச் செயலா்கள் சுப்ரமணியன், ஆா்.எஸ். ராஜா, ஜோதிபாசு, வி.ஜிஎஸ். குமாா் மற்றும் மாநகராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

‘சாலையில் மக்கள் சந்திப்பு’ நடத்திய துணை முதல்வா்: முன்னதாக உதயநிதிஸ்டாலின் அவா் தங்கியிருந்த கோவை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து மாலை 4 மணிக்கு சாலையில் மக்கள் சந்திப்புக்காக வழியாகப் புறப்பட்டு புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்றாா். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் அவரை வரவேற்றனா்.

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா

தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா். கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை ... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்... மேலும் பார்க்க