திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்
வாக்கு மோசடியில் ஈடுபடுவதாக, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், அதற்கு துணை போவதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டது.
குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை இரவு நடைபெற்ற 1 லட்சம் கையெழுத்து பெறும் இந்த நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஜலந்தா், வட்டாரத் தலைவா்கள் எம்.வீராங்கன், சங்கா், ஜோதிகணேஷ், செல்வகுமாா், தாண்டவமூா்த்தி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் என்.எம்.டி.விக்ரம், மாவட்டப் பொருளாளா் விஜயேந்திரன், இலியாஸ், அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.