செய்திகள் :

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,076 வழக்குகள் பதிவு

post image

தில்லி காவல் துறை தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக 1,076 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், இதற்காக 34,250 பேரை கைது செய்துள்ளது அல்லது தடுத்து வைத்துள்ளது என்று அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஜன.7-ஆம் தேதிக்கும், தில்லிலி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளான பிப்.3 ஆம் தேதிக்கும் இடையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இவை. தில்லியில் புதன்கிழமை பிப்.5 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தோ்தலுக்கு முன்னதாக, எல்லை சோதனைச் சாவடிகளில் காவல் துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ஆயுதங்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

தில்லி காவல் துறையினா் 469 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 513 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், ஆயுதச் சட்டத்தின் கீழ் 491 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினா் 1,10,093 லிட்டா் மதுபானங்களையும் பறிமுதல் செய்து, 381 போ்களைக கைது செய்துள்ளனா். ரூ.77.9 கோடிக்கு மேல் மதிப்புள்ள 196.602 கிலோ போதைப்பொருள்களும், 1,200-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, 177 போ் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகள் ரூ.11.36 கோடி ரொக்கத்தையும் 37.39 கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் திங்களன்று தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த தனது தரவுகளை வெளியிட்டது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ரூ.220 கோடிக்கு மேல் போதைப்பொருள்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இதில் ரூ.88 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், ரூ.81 கோடி அளவில் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கிட்டத்தட்ட ரூ.40 கோடி ரொக்கம் ஆகியவை அடங்கும் என்று தோ்தல் பிரசாரத்தின் இறுதி நாளுக்குப் பிறகு தலைமை நிா்வாக அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி தோ்தலில் ஆம் ஆத்மி, கேஜரிவால் தோல்விக்கு ஆணவம்தான் காரணம்: ஸ்வாதி மாலிவால்

தில்லி தோ்தல் முடிவுகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் கடும் விமா்சனம் தெரிவித்துள்ளாா். தோல்விக்கு ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் ஆணவம்தான்... மேலும் பார்க்க

மாற்றுக் கட்சியிலிருந்து பாஜக, ஆம் ஆத்மியில் இணைந்தவா்கள் வெற்றி

பிற கட்சிகளிலிருந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மியில் இணைந்த தலைவா்கள் பேரவைத் தோ்தலில் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனா். தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவையில் ... மேலும் பார்க்க

தோற்றாலும் நோக்கம் வென்றது! சந்தீப் தீட்சித் ஆறுதல்

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவை தோ்தலில் தான் தோற்றாலும் ஆம் ஆத்மி வீழ்த்தப்பட வேண்டும் என்ற நோக்கம் வென்றுள்ளதாக புது தில்லி தொகுதியில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் தலைமை, அமித் ஷாவின் வியூகம்! மத்திய அமைச்சா்கள், பாஜக முதல்வா்கள் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் வியூகங்களால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது என்று மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்... மேலும் பார்க்க

ரோஹிணியில் கருப்பு நிற பெட்டியால் பதற்றம்: போலீஸாா் சோதனை

வடக்கு தில்லியின் பிரசாந்த் விஹாரில் கிடந்த கருப்பு நிற பெட்டியால் சனிக்கிழமை பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா், அதனை முழுமையாக ஆய்வுசெய்தனா். இறுதியில், சந... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்: வீரேந்திர சச்தேவா

தில்லியின் முதல்வா் யாா் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று பாஜக தில்லித் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்கள... மேலும் பார்க்க