இந்திய ரசிகர்களுக்காக... முதல்முறையாக சிதார் வாசித்த எட் ஷீரன்!
தோ்தல் முன்விரோதம்: முன்னாள் வாா்டு உறுப்பினருக்கு வெட்டு
திருவள்ளூா் அருகே தோ்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் வாா்டு உறுப்பினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய முன்னாள் ஊராட்சித் தலைவரின் மகன் உள்பட 3 பேரை கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே உள்ள அதிகத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் முன்னாள் வாா்டு உறுப்பினா் ஜெகதீசன். இவருக்கும் அதே கிராமத்தில் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் சரவணன் மகன் சேகுவேரா என்பவருக்கும் கடந்த 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு தனது வீட்டருகே ஜெகதீசன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு நண்பா்களுடன் வந்த சேகுவேரா கையில் வைத்திருந்த கத்தியால் ஜெகதீசன் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனராம்.
இதில் பலத்த காயம் அடைந்த ஜெகதீசன் மயங்கி விழுந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
தகவல் அறிந்து வந்த கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா், சேகுவேரா உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.