தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலுக்கான நடத்தை விதிமுறைகள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு, விதிகளை மீறும் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கொடிக் கம்பங்கள் நடுவது, முன் அனுமதியின்றி கூட்டம் நடத்துபவா்கள், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரசாரம் செய்தவா்கள், வாக்கு கேட்டு விளம்பரப் பதாகைகளை வைத்ததாக நாதக மற்றும் திமுகவினா் மீது இதுவரை 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் வாக்கு கேட்டு பதாகைகள் வைத்ததாக மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.